பாரம்பரிய முறையில் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை..!

72

உத்தரபிரதேசத்தில் ஆண்களை பெண்கள் தடியால் அடித்து ஹோலி பண்டிகை கொண்டாடும் பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற்றது.

உத்தரபிரதேச மாநிலம் பர்சானா மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் ஹோலி கொண்டாட்டத்தின் போது, ஆண்களை லத்தியால் அடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். இதன்படி பர்சானா பகுதியில் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ராதா ராணி கோவிலில் தொடங்கிய நிகழ்ச்சியில் பாரம்பரிய உடையில் பங்கேற்ற பெண்கள் வண்ணம் பூசியும் லத்தியால் ஆண்களை அடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த கொண்டாட்டம் மன அழுத்தத்தை குறைப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.