கர்நாடகாவில் இரு சக்கர வாகனங்களில் இருவர் செல்ல தடை விதிக்க அம்மாநில அரசு முடிவு …!

558

கர்நாடகாவில் இரு சக்கர வாகனங்களில் இருவர் செல்ல தடை விதிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கர்நாடகாவில் சமீபகாலமாக சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலும் இருசக்கர வாகனமே விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு அதிகரிக்கிறது என புள்ளி பட்டியல் தெரிவிக்கிறது. இதையடுத்து உயிரிப்புகளை தவிர்க்க கடுமையான வாகன சட்டங்கள் கொண்ட வரபோவதாகவும், 100 குதிரை திறனுக்கு கீழ் உள்ள இரு சக்கர வாகனத்தில் இருவர் செல்ல தடை விதிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விரைவில் சுற்றரிக்கை வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் இடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.