இரட்டை இலை சின்னம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு ..!

393

இரட்டை இலை சின்னம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தினகரன் மற்றும் கே.சி.பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்றும், பொதுச்செயலாளர் விவகாரத்தை மீண்டும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் கே.சி.பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.