இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான 6-ம் கட்ட விசாரணை இன்று தலைமை தேர்தல் ஆணையத்தில் நடைபெற உள்ளது..!

499

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான 6-ம் கட்ட விசாரணை இன்று தலைமை தேர்தல் ஆணையத்தில் நடைபெற உள்ளது.
தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் ஈ.பி.எஸ் மற்றும் தினகரன் அணியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கை விரைந்து முடிக்கும் நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த 1-ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, தினகரன் அணி வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் வழக்கை வரும் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை இதுவரை ஐந்து கட்டமாக முடிந்துள்ள நிலையில், இன்று நடைபெறும் 6-ம் கட்ட விசாரணையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் மற்றும் தினகரன் அணிகளின் வழக்கறிஞர்கள், தங்கள் தரப்பு வாதங்களை தேர்தல் ஆணையத்திடம் முன்வைக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.