விடுதிகள், வீடுகளில் தங்கியுள்ள வெளிநாட்டவர் விபரங்களை ஒப்படைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – மாவட்ட எஸ்பி பொன்னி

281

திருவண்ணாமலை தனியார் விடுதிகள் மற்றும் வீடுகளில் தங்கியுள்ள வெளிநாட்டவர் விபரங்களை ஒப்படைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி பொன்னி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவண்ணாமலையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஷியப்பெண்ணிடம், அந்நாட்டு தூதரக விசா பரிசோதகர் டேவிஷ் விசாரணை மேற்கொண்டார். இதனையடுத்து, 100-க்கும் மேற்பட்ட தனியார் விடுதிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட எஸ்பி பொன்னி தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்பி .பொன்னி, திருவண்ணாமலைக்கு வந்து தங்கும் வெளிநாட்டவர் குறித்த விபரங்களை 24 மணிநேரத்திற்குள் எஸ்பி அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கூறினார். தவறும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். வெளிநாட்டுப்பயணிகளை தங்க வைக்க காவல்துறையில் முறையான அனுமதி பெற வேண்டும் என்றும் எஸ்பி பொன்னி தெரிவித்துள்ளார்.