டி.என்.பி.எல். லீக் ஆட்டத்தில் சேப்பாக் அணியை வீழ்த்தி தூத்துக்குடி அணி வெற்றி..!

296

டி.என்.பி.எல். லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி வெற்றி பெற்றது.

டி.என்.பி.எல். ஆட்டத்தின் நேற்றிய லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் உடன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய வீரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முடிவில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 167 ரன்களை எடுத்தது.

அதிகபட்சமாக கார்த்திக் 43 ரன்களையும், கோபிநாத் 40 ரன்களையும் எடுத்தனர். 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தூத்துக்குடி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் 17.2 ஓவர் முடிவில் 169 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் செனையை வீழ்த்தி, தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி வெற்றி பெற்றது.