தூத்துக்குடியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் ஆறு லட்சத்து, 20ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகனை மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் வழங்கினார்.

211

தூத்துக்குடியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் ஆறு லட்சத்து, 20ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகனை மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள புத்தன்தருவை கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அவ்வாறு பெற்றப்பட்ட மனுக்களுக்கு உரிய பதில்கள் அளிக்கப்பட்டன. தொடர்ந்து, பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, மற்றும் பெண்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட ஆறு லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வெங்கடேஷ் வழங்கினார். நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் கணேஷ்குமார், வேளாண்மை இணை இயக்குநர் செல்வராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.