தூத்துக்குடியில் கொட்டித்தீர்த்த கன மழையால் சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது.

264

தூத்துக்குடியில் கொட்டித்தீர்த்த கன மழையால் சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கிரேட் காட்டன் ரோடு, செயிண்ட் பீட்டர் தெரு, பாளை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், சாலைகளில் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளதால், பள்ளி கல்லூரி செல்லும் மாணவிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகினர். சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலை மழை பெய்துள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்