தூத்துக்குடியில் டிஎஸ்பி தாக்கப்பட்ட விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.!

630

தூத்துக்குடியில் டிஎஸ்பி தாக்கப்பட்ட விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பியாக இருந்து வருபவர் சீமைச்சாமி. இவர், தூத்துக்குடி ஒன்றிய அலுவலகம் அருகே பொதுமக்கள் நடத்திய போராட்டத்தை கலைக்க முயன்றார். ஆனால் கலைந்து செல்ல பொதுமக்கள்,மறுத்ததையடுத்து 39 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்தோனியார்புரம் பகுதியில் தனது காரில் சென்றுகொண்டிருந்த டிஎஸ்பி சீமைச்சாமியை மதுபோதையில் வழிமறித்து 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றது. இதில் டிஎஸ்பியின் சட்டை கிழிந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.