தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகள் தொடர்பாக மத்திய தொல்லியல் துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற….

442

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகள் தொடர்பாக மத்திய தொல்லியல் துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கி.மு.1600 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான நாகரிகமாக கருதப்படும் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த 1904 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அகழாய்வு பணியில் தமிழர்களின் தொன்று தொட்ட மரபுகளை காட்டும் பல்வேறு சான்றுகள் சிக்கின. இதனை தொடர்ந்து நடைபெற்ற அகழாய்வு பணிகளுக்கான ஆய்வறிக்கை முடக்கப்பட்டதுடன், அகழாய்வு பணிகளும் நிறுத்தப்பட்டது. இதனால் தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில், அகழாய்வு பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என காமராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து மத்திய தொல்லியல் துறை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.