தூத்துக்குடியில் 20 டன் கோதுமை மூட்டைகளை கடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

179

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள தனியார் இறக்குமதி நிறுவனத்தில், கோதுமைகளை சேமித்து வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கப்பல் மூலம் துறைமுகத்திற்கு வந்த கோதுமை மூட்டைகளை லாரிகளில் ஏற்றப்பட்டு, கிட்டாங் பகுதிக்கு அனுப்பப்பட்டன. அதில் 2 லாரிகள் மட்டும் அந்த பகுதிக்கு செல்லாமல், 20 டன் கோதுமை மூட்டைகளுடன் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு 8 லட்ச ரூபாய் ஆகும். இதுகுறித்து சிப்காட் காவல்நிலையத்தில் புகார் செய்ததை அடுத்து, 2 லாரிகளை மடக்கி பிடித்து பறிமுதல் செய்த காவல்துறையினர், லாரி ஓட்டுனர்கள் உள்ளிட்ட 4 பேரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.