துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை நேரில் சந்தித்து பேசுகிறார்.

362

தூத்துக்குடி வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை நேரில் சந்தித்து பேசுகிறார்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை அமைச்சர் கடம்பூர் ராஜீ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் ஆலோசனை நடத்திய அவர், ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது ஏற்பட்ட பாதிப்புகளையும் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்ததால் தான் வன்முறை வெடித்ததாக குற்றஞ்சாட்டினார். ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதே அரசின் நோக்கம் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை தூத்துக்குடி செல்கிறார். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களையும், மருத்துவமனையில் உள்ளவர்களையும் அவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.