ஸ்டெர்லைட் ஆலைக்கு வலுக்கும் எதிர்ப்பு : போராட்டக் களத்தில் கல்லூரி மாணவர்கள் ..!

515

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி கடந்த 40 நாட்களுக்கு மேலாக பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டுள்ளதால் தூத்துக்குடி ஸ்தம்பித்துள்ளது. இந்தநிலையில், பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வ.உ.சிதம்பரம் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நச்சுக் கழிவை வெளியேற்றும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.