ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து 900 டன் அமில கசிவுகள் வெளியேற்றம்..!

149

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து 900 டன் அமில கசிவுகள் வெளியேற்றப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள அமிலத்தை வெளியேற்றும் பணி இன்றும் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களின் போராட்டத்தையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஆலையில் கந்தக அமிலம் கசிந்து வெளியேறியது. இதனையடுத்து, கசிவை சரி செய்யும் பணியை அதிகாரிகள் முடுக்கி விட்டனர். சார் ஆட்சியர் முன்னிலையில் வல்லுநர் குழுவினர் அமில கழிவுகளை சரி செய்து வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலம் லாரிகளில் ஏற்றப்பட்டு பாதுகாப்புடன் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது.இந்நிலையில் 5வது நாளாக அமில கழிவுகளை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 900 டன் அமிலங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள கழவுகளை வெளியேற்றும் பணி இன்றும் தொடரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.