2 மாத விடுமுறைக்கு பின் சோபியா கல்வி பயில கனடா செல்வார்..!

234

மாணவி சோபியா விவகாரம் அரசியலாக்கப்படவில்லை என்றும், அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை சமூகத்திற்கு பரவலாக்கப்பட்டுள்ளதாகவும் சோபியா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

சோபியாவின் பாஸ்போர்ட்டை விசாரணைக்கு தாக்கல் செய்வதற்காக புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு சோபியாவின் தந்தை டாக்டர் சாமி, வழக்கறிஞர்கள் அதிசயகுமார் மற்றும் சந்தானராஜ் ஆகியோர் வந்திருந்தனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சோபியா தரப்பு வழக்கறிஞர் அதிசயகுமார், சோபியாவின் பழைய பாஸ்போர்ட் மற்றும் அமெரிக்க விசா இரண்டையும் புதுக்கோட்டை காவல் துறையினர் ஒப்படைத்ததால், நீதிமன்றத்தில் தன்னிடம் வாங்கப்பட்ட பொருட்களை திரும்ப ஒப்படைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.

2 மாத விடுமுறைக்கு பின் கல்வி பயில சோபியா மீண்டும் கனடாவுக்கு செல்வார் என்று தெரிவித்த அவர், சோபியாவின் விவகாரம் அரசியலாக்கப்படவில்லை என்றும், அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் சமூகத்திற்கு பரவலாக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு ஆதரவு தெரிவித்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.