மாணவியின் தந்தைக்கு புதுக்கோட்டை போலீசார் சம்மன் : காவல்துறையின் திடீர் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம்

291

மாணவி சோபியாவின் புதிய பாஸ்போர்ட்டுடன் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவரது தந்தைக்கு புதுக்கோட்டை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தூத்துக்குடி கந்தன் காலனியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் சாமியின் மகள் சோபியா. கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்துவரும் இவர், கடந்த 3ம் தேதி தூத்துக்குடிக்கு வந்த விமானத்தில் பயணம் செய்துள்ளார். அப்போது, விமானத்தில் இருந்த தமிழிசைக்கு எதிராக, பாசிச பாஜக அரசு ஒழிக என்று சோபியா கோஷங்களை எழுப்பினார். இதனை தொடர்ந்து தமிழிசை அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சோபியாவை கைது செய்தனர்.

விசாரணையின் போது, அவரிடம் இருந்து பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தநிலையில், காலாவதியான பாஸ்போர்ட் கொடுத்துள்ளதால், சோபியாவின் புதிய பாஸ்போர்ட்டுடன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அவரது தந்தை சாமிக்கு புதுக்கோட்டை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். காவல்துறையின் திடீர் நடவடிக்கையை கண்டித்து, பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.