செம்மரக்கட்டைகளை மலேசியா கடத்த முயன்றது அம்பலம் : 3 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மர கட்டைகள் பறிமுதல்

278

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற 3 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மர கட்டைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மதுரையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த கண்டெய்னர் லாரியில் சட்டவிரோதமாக செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, தூத்துக்குடி சுங்கத்துறை அதிகாரிகள் புறவழிச்சாலையில் திடீர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரியில் இருந்த ஒன்பதரை டன் எடை கொண்ட செம்மரக்கட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சட்டவிரோதமாக, செம்மரக்கட்டைகளை தூத்துக்குடி துறைமுகம் வழியாக மலேசியாவுக்கு கடத்த முயன்றது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து, லாரியில் வந்த 3 நபர்களை கைது செய்த அதிகாரிகள், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.