தூத்துக்குடியில் படிப்படியாக போலீசாரின் எண்ணிக்கை குறைக்கப்படும் – டிஜிபி ராஜேந்திரன்

354

தூத்துக்குடியில் படிப்படியாக போலீசாரின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று டிஜிபி ராஜேந்திரன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களிடம் டிஜிபி ராஜேந்திரன் குறைகளைக் கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசியவர், தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் கவலையளிப்பதாகக் கூறினார். தூத்துக்குடி சம்பவம் தொடர்பான நீதி விசாரணை கமிஷன் முடிந்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்தார்.