தூத்துக்குடியில் கார் ஓட்டுனர் 3 நபர்களால் வெட்டி படுகொலை | போலீசார் தீவிர விசாரணை …!

291

தூத்துக்குடியில் கார் ஓட்டுனர் 3 நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக டென்சிங் என்ற நபர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கார் ஓட்டுனர் ஆரோக்கியராஜ் என்பவர் மீது வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று பிரையண்ட் நகர் உள்ள ஆரோக்கியராஜின் இல்லத்திற்கு வந்த 3 மர்ம நபர்கள் அவரை வேறு காரணம் கூறி அருகில் உள்ள பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். பாதி வழியிலேயே 3 நபர்களின் சதித்திட்டங்களை புரிந்துகொண்ட ஆரோக்கியராஜ் அவர்களுடன் செல்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த மூவரும் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆரோக்கியராஜை சரமாரியாக வெட்டினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து ஆரோக்கியராஜின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.