டிஜிட்டல் பேனர் வைக்கும் தகராறில் இரண்டு வாலிபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம், தூத்துக்குடி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

206

தூத்துக்குடியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் பத்மநாபனுக்கு பேரூரணி  என்ற ஊரில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.  இந்த நிலையில் பத்மநாபனின்  நண்பர்களான காசிராஜன் மற்றும் லிங்கராஜா ஆகியோர் திருமணத்திற்காக டிஜிட்டல் பேனரை  இரவில் கட்டிக்கொண்டிருந்தனர் . அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர் இங்கு பேனர் வைக்க கூடாது என கூறி தகராறு செய்துள்ளனர். இந்த இரு தரப்பினரையும் ஊர் பொது  மக்கள் மற்றும் திருமண வீட்டார் சமரசம் செய்து அனுப்பிவைத்துள்ளனர். பேனர் கட்டியவுடன்  பத்மநாபனின் நண்பர்கள் தூங்க சென்று விட்டனர். இந்த நிலையில் காலையில் மொட்டை மாடியில் தூங்கி கொண்டிருந்த காசிராஜன் மற்றும் லிங்கராஜா ஆகிய இருவரும் பலத்த வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தனர். இது குறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தட்டப்பாறை காவல் துறையினர் பிரேதங்களை  கைப்பற்றி அரசு மருத்துவ மனைக்கு  அனுப்பி வைத்தனர். இந்த இரட்டை  கொலை சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.