தூத்துக்குடி அருகே பிரபல ரவுடி லெனின், 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை ….

937

தூத்துக்குடி அருகே பிரபல ரவுடி லெனின், 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தூத்துக்குடி மாவட்டம் பழைய காயல் அருகே அகரம் பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் என்பவரின் மகன் லெனின். பிரபல ரவுடியான இவர் மீது சாயர்புரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, காரில் வந்த 8 பேர் கொண்ட மர்மகும்பல் லெனினை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இந்த தாக்குதலில் நிலைகுலைந்த லெனின் சம்பவ இடத்திலேயே உயிரிழ்ந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏரல் போலீசார் லெனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்