தூத்துக்குடியில் 5 நாட்களுக்கு பிறகு இணையதள சேவை மீண்டும் தொடக்கம்

171

தூத்துக்குடியில் முழு அமைதி திரும்பியதால், 5 நாட்களுக்கு பிறகு இணையதள சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் கடந்த 22-ம் தேதி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இதனையடுத்து வதந்திகளை பரவாமல் தடுக்கும் விதமாக 23-ம் தேதி முதல் தூத்துக்குடி , நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில், 5 நாட்களுக்கு பிறகு தூத்துக்குடியில் நேற்று முழு அமைதி திரும்பியது. இதனையடுத்து டி.ஜி.பி. டிகே. ராஜேந்திரன், போலீஸ் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு நள்ளிரவு முதல் மீண்டும் இணையதள சேவை வழங்கப்பட்டுள்ளது.