தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் இதுவரை 112 முடநீக்கியல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

238

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் இதுவரை 112 முடநீக்கியல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் எலும்பு முறிவுத்துறையின் சார்பில் மாநில அளவிலான மூட்டுமாற்று சிறப்பு கருத்தரங்கம், கல்லூரி முதல்வர் சாந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில், முடநீக்கியல் குறித்து செய்முறை பயிற்சிகள் நடைபெற்றன. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து வந்த முடநீக்கியல் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முடநீக்கியல் மருத்துவர் பாவலன், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரை 112 அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளதாகவும், தமிழக அளவில் முடநீக்கியல் அறுவை சிகிச்சை மேற்கொண்டதில், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரண்டாம் இடம் பிடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.