நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமனம்

236

துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கூடுதல் இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திரன் சென்னை போக்குவரத்து காவல்துறை துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.