தூத்துக்குடிக்கு சென்ற தனியார் விமானத்தில் நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. சாதுர்யமாக செயல்பட்ட விமானி சென்னையில் பத்திரமாக தரையிறக்கினார்.

320

தூத்துக்குடிக்கு சென்ற தனியார் விமானத்தில் நடுவானில்
இயந்திர கோளாறு ஏற்பட்டது. சாதுர்யமாக செயல்பட்ட விமானி சென்னையில் பத்திரமாக தரையிறக்கினார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஸ்பைஸ் ஜெட் தனியார் விமானம், திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம் உட்பட 86 பேருடன் இன்று காலை எட்டே முக்கால் மணிக்கு தூத்துக்குடிக்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் அதில் இயந்திர கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி அறிந்தார். இதையடுத்து சாதுர்யமாக செயல்பட்ட அவர் விமானத்தை கடலின் மீது பறக்கச் செய்தார், சுமார் ஒரு மணி நேரம் விமானம் பறந்ததால், அதிலிருந்த எரிபொருள் பெருமளவில் குறைந்தது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் அந்த விமானம் பத்திரமாக தரை இறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும், மாற்று விமானம் மூலம் தூத்துக்குடி புறப்பட்டுச் சென்றனர்