மோடிக்கு எதிராக கோஷமிட்ட பெண் பயணி : காவல்நிலையத்தில் தமிழிசை புகார்

349

தூத்துக்குடி விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷமிட்ட பெண் பயணி மீது தமிழிசை சவுந்தரராஜன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தூத்துக்குடியை சேர்ந்த சாமி என்பவரது மகள் லூயிஸ் சோபியா. இவர் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தார். அதே விமானத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் வந்திறங்கினார். அப்போது சோபியா பிரதமர் மோடி, மற்றும் தமிழிசைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தமிழிசை அந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து அந்த பெண் மீது தமிழிசை விமான நிலைய போலீஸிடம் புகார் அளித்தார். தமிழிசை புகாரின் பேரில் சோபியாவை புதுக்கோட்டை மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.