17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் : இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை

127

கோயில்பட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோயில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி பகுதியை சேர்ந்தவர் குழஞ்சியப்பன். இவரது 17 வயது மகள் தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் தண்ணீர் கேட்பதுபோல் வீட்டிற்குள் நுழைந்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடியுள்ளார். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து, அனைத்து மகளிர் போலீசார் கார்த்திக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவல் அறிந்து வந்த உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டாதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.