நண்பர்களுடன் குளிக்க சென்ற இடத்தில் விபரீதம்..!

172

நெல்லை தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்ற இளைஞர் ஒருவர், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சுந்தரவேல் புரத்தை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன். கட்டட தொழிலாளியான இவர், நெல்லை மாவட்டம் சமாதானபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது, கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் தனது நண்பர்களுடன் குளிக்க சென்ற அவர், எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.