தூத்துக்குடி அருகே நடந்த சாலை விபத்தில் பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர்.

180

தூத்துக்குடி அருகே நடந்த சாலை விபத்தில் பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் திருச்செந்தூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். தூத்துக்குடி- மதுரை
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜெகவீரபாண்டியபுரம் அருகே வந்த போது, காரின் டயர் திடீரென வெடித்தது. இதில் நிலைதடுமாறிய கார் நேராக தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்தனர்.படுகாயமடைந்த 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் பெண் உள்பட 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். காயமடைந்த மற்ற 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து எப்போதும் வென்றான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்