துப்பாக்கிச்சூடு தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையக்குழு கடந்த 5 நாட்களாக நடத்திய விசாரணை நிறைவு ..!

105

துப்பாக்கிச்சூடு தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையக்குழு கடந்த 5 நாட்களாக நடத்திய விசாரணை நிறைவு பெற்றது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந் தேதி போராட்டக்காரர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இவர்களது 12 பேர் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒருவரது உடல் மட்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து கடந்த 5 நாட்களாக தேசிய மனித உரிமை ஆணையக்குழு நடத்தி வந்த விசாரணை நிறைவு பெற்றது.

கடந்த 2-ந் தேதி தங்களது விசாரணையை துவங்கிய அவர்கள் முதலில் துப்பாக்கி சூடு மற்றும் மோதல் நடந்த இடங்களை பார்வையிட்டனர். மேலும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசாரிடமும் ரகசிய விசாரணை நடத்திய அதிகாரிகள், தடியடியில் இறந்தவர்களின் உறவினர்கள், காயமடைந்தவர்கள், மேலும் வழக்கு சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர்.