துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் – ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

197

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக ஆளுநர் பன்வாரிலால் இன்று தூத்துக்குடிக்கு சென்றார். அங்கு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த அந்தோணிராஜ் மற்றும் செல்வசேகர் ஆகியோரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனைத்தொடர்ந்து, துப்பாக்கிச் சூட்டால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் அவர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனை நடத்தினார்.