துப்பாக்கிச்சூடு வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்

127

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடியில் கடந்த 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்கள், போலீஸார் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களை தடுக்க, போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்கூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்த உத்தரவிட்டது யார்? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இதனையடுத்து, துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, தூத்துக்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், ஏற்கெனவே இரண்டு துணை வட்டாட்சியர்கள் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டதாக எப்ஐஆர் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி, தமிழக டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.