தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ரூ.5 கோடி செலவில் கட்டப்பட்ட 8 சார் கருவூலக கட்டிடங்கள்! ஜெயலலிதா திறந்து வைத்தார்!!

279

சென்னை,ஜூலை.22–
முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச்செயலகத்தில், நிதித்துறைசார்பில்திருப்பூர்மாவட்டம், மடத்துக்குளத்தில்52லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார்கருவூல அலுவலகக் கட்டடத்தை காணொலிக்காட்சி மூலமாகத்திறந்துவைத்தார். மேலும், தூத்துக்குடி, ராமநாதபுரம், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலிஆகிய மாவட்டங்களில் 4 கோடியே 87 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்மதிப்பீட்டில்கட்டப்பட்டுள்ள 8 சார்கருவூல அலுவலகக்கட்டடங்களை திறந்து வைத்தார்.
நிர்வாகவசதிக்காகவும், அரசுக்குஏற்படும்தொடர் வாடகை செலவினத்தைத் தவிர்க்கவும், தற்போதுமின்ஆளுமை திட்டங்களான தானியங்கி பட்டியல் ஏற்புமுறை மற்றும் மின்ஓய்வூதியம் போன்ற திட்டங்களை செம்மையாக செயல்படுத்திடவும், விலை மதிப்புமிக்க முத்திரைத்தாள்கள் மற்றும் சேம பாதுகாப்பு பொருட்கள்ஆகியவற்றைப் பாதுகாக்கவும், வாடகை கட்டடங்களில் இயங்கும் சார்கருவூலங்களுக்குசொந்தக்கட்டடங்கள் கட்டப்படும் என்றுநிதித்துறை மானியக்கோரிக்கையின்போது முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசால் அறிவிக்கப்பட்டு, கடந்த5 ஆண்டுகளில் 14 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவில் 25 சார்கருவூலஅலுவலகக் கட்டடங்கள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன.
திருப்பூர்மாவட்டம், மடத்துக்குளத்தில் 3060 சதுரஅடிகட்டட பரப்பளவில், தரை மற்றும்இரண்டு தளங்களுடன், காப்பறை, சாய்தளம், மாற்றுத்திறனாளிகளுக்கானகழிவறை, ஓய்வூதியதாரர்களுக்கான காத்திருப்பு அறை உள்ளிட்ட வசதிகளுடன் 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளசார் கருவூல அலுவலகக் கட்டடத்தை ஜெயலலிதா காணொலிக்காட்சி மூலமாகத் திறந்துவைத்தார்.