தூத்துக்குடியில் இணைய தள சேவை முடக்கம் தொடரும் என அறிவிப்பு…!

312

நெல்லை, குமரி மாவட்டங்களில் இணைய தளம் முடக்கப்பட்டதை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு நாடெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இணைய தள சேவையை 5 நாட்களுக்கு முடக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் அந்த மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் மிகவும் அவதிப்பட்டனர். இணைய தள சேவை முடக்கப்பட்டது குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியது. இதையடுத்து நெல்லை, குமரி மாவட்டங்களில் இணைய தளம் முடக்கத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் தூத்துக்குடி மாவட்டத்தில் இணைய தளம் முடக்கம் தொடரும் என்று அரசு தெரிவித்துள்ளது.