தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

450

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவையின் நிறுவனரான வெங்கடேஷ் பண்ணையாரின் 13-வது நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, வரும் 26ம் தேதி அம்மன்புரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெறுகிறது. சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையிலும், அமைதியை ஏற்படுத்தும் வகையிலும், இன்று மாலை 6 மணி முதல் வரும் 27ம் தேதி காலை 6 மணி வரை, மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு காலங்களில் ஊர்வலங்கள் நடத்திடவும், பொது இடங்களில் 5க்கும் மேற்பட்டோர் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாடகை வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.