இந்தியா வந்துள்ள துருக்கி அதிபர் எர்டோகன் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார்

221

அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள துருக்கி அதிபர் எர்டோகன் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார்.
அதிபருடன் அவரது மனைவி எமைன் எர்டோகன், காபினெட் அமைச்சர்கள் மற்றும் 150 பேர் அடங்கிய வர்த்தகக் குழுவும் வந்துள்ளது.நாளை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்ஜை சந்திப்பார்; பின்னர் இந்திய துருக்கிய வர்த்தக அமைப்பு நடத்தும் கூட்டத்தில் தொழிலதிபர்களுடன் அதிபர் கலந்துரையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய நிகழ்ச்சியாக பிரதமர் மோடியுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவார். அப்போது பிராந்திய விவகாரங்கள், அணு சக்தி விநியோகிப்பாளர் குழுவில் இந்தியா உறுப்பினராவது குறித்து பேசப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. துருக்கி இந்தியா இக்குழுவில் இணைவதை நேரடியாக எதிர்க்கவில்லை; ஆனால் பிரதான உறுப்பினர்கள் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இடம் பெறாத நாடுகள் அணுசக்தி விநியோகிப்பாளர் குழுவில் இணைவதற்கு புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று கோருகிறது. அது தவிர இரு தரப்பு உறவு, தீவிரவாத எதிர்ப்பு மற்றும் வர்த்தக உறவுகள் குறித்தும் பேசப்படும். குடியரசுத் தலைவரையும் சந்திக்கும் எர்டோகன் காந்தி சமாதியிலும் மரியாதை செலுத்துவார். துருக்கி அதிபருக்கு ஜாமிய மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது.