கமலஹாசன் விஜய்யை அரசியலுக்கு அழைத்ததில் தவறில்லை – டிடிவி தினகரன்

173

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் நடிகர் விஜய்யை அரசியலுக்கு வருமாறு அழைத்ததில் தவறில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நடைபெற்ற அக்கட்சி நிர்வாகியின் இல்லத் திருமணத்தில் கலந்துகொண்ட டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 8 வழி சாலை திட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தின் அனுமதி பெற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். ஆளுநர் ஆய்வுக்கு எதிராக தி.மு.க. கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவது தேவையில்லாதது என்றும் தினகரன் கூறினார்.