நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவி சுபஸ்ரீ குடும்பத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி..!

268

நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவி சுபஸ்ரீ குடும்பத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல்கேட் பகுதியைச் சேர்ந்த மாணவி சுபஸ்ரீ, நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் மாணவியின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில், 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. இதனை கழக அமைப்புச் செயலாளரும், வடக்கு மாவட்ட கழகச் செயலாளருமான ஆர்.மனோகரன் வழங்கினார்.