முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு டிசம்பர் மாதத்தை தாண்டாது : தினகரன் திட்டவட்டம்.

386

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு டிசம்பர் மாதத்தை தாண்டாது என்று தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு பாதிப்பு குறித்து மக்களை அரசு ஏமாற்ற முடியாது என்று தெரிவித்தார். டெங்கு பாதிப்பிற்கு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது தான் காரணம் என குற்றம்சாட்டினார். டெங்குவைவிட தற்போதைய ஆட்சி மோசமானது என்று சுட்டிக் காட்டிய தினகரன், டெங்கு காய்ச்சலை போன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த ஆட்சி டிசம்பர் மாதத்தை தாண்டாது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். பழனிசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க ஓ.பன்னீர் செல்வம் வாக்களித்ததாக சுட்டிக் காட்டிய தினகரன், விரைவில் ஓ.பி.எஸ்-ன் பதவி பறிபோகும் என்று தெரிவித்துள்ளார்.