மதுரை மாவட்டம் மேலூரில் இன்று நடைபெறும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் தனது புதிய கட்சியை டிடிவி.தினகரன் அறிவிக்கிறார்..!

239

மதுரை மாவட்டம் மேலூரில் இன்று நடைபெறும் பிரமாண்ட நிகழ்ச்சியில் தனது புதிய கட்சியை டிடிவி.தினகரன் அறிவிக்கிறார்.தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. 3 அணிகளாக உடைந்தது. பின்னர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைக்கப்பட்டன. ஆனால் டி.டி.வி. தினகரன் அணியினர் தனியாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் டி.டி.வி. தினகரன் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து டி.டி.வி. தினகரன் புதிய கட்சி தொடங்கி ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபடுவோம் என தெரிவித்திருந்தார். அதன்படி மதுரை மாவட்டம், மேலூரில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய கட்சியை தினகரன் அறிவிக்கிறார். அத்துடன் கட்சியின் கொடியையும் அவர் அறிமுகம் செய்யயுள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருகிறது.