திருச்சி அதிமுக எம்பி-க்கு கொலை மிரட்டல் விடுத்ததாக டிடிவி. தினகரன் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!

439

திருச்சி அதிமுக எம்பி-க்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், டிடிவி. தினகரன் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மக்களவை தொகுதி அதிமுக எம்பியான குமாரை, அதிமுக இளைஞர் இளம்பெண் பாசறை மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருந்து, அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான டி.டி.வி தினகரன் நீக்கி அறிவித்துள்ளார். இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய குமார், தன்னை கட்சியில் இருந்து நீக்க துணைப் பொதுச் செயலாளரான தினகரனுக்கு எந்த தகுதியும் இல்லை என கடுமையாக சாடினார். இந்நிலையில் டிடிவி தினகரன் தன்னை தொலைபேசியில் மிரட்டியதாக திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் குமார் எம்.பி புகார் அளித்துள்ளார். அதன்மீது விசாரணை நடத்துமாறு மாநகர குற்றப்பிரிவு போலீஸாருக்கு, காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டதைத்தொடர்ந்து,.டிடிவி.தினகரன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.