தமிழக அமைச்சர்கள் 4 பேரை கட்சி பொறுப்பில் இருந்து அதிரடியாக நீட்டி டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

1935

தமிழக அமைச்சர்கள் 4 பேரை கட்சி பொறுப்பில் இருந்து அதிரடியாக நீட்டி டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்து ஆர்.பி.உதயகுமார் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி நியமிக்கப்பட்டுள்ளார்.
WhatsApp Image 2017-08-23 at 3.18.43 PM

WhatsApp Image 2017-08-23 at 3.18.39 PM

WhatsApp Image 2017-08-23 at 3.18.37 PM

WhatsApp Image 2017-08-23 at 3.18.48 PM
மதுரை மாவட்ட புறநகர் செயலாளர் பதவியில் இருந்து ராஜன் செல்லப்பா நீக்கப்பட்டு, அவருக்கு மாற்றாக இ.மகேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோன்று, கரூர் மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்ஆர் விஜயபாஸ்கர் நீக்கப்பட்டு, எம்எல்ஏ செந்தில்பாலாஜி பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் பதவியில் இருக்கும் எம்எல்ஏ கேசி வீரமணி விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக எம்எல்ஏ ஆர்.பாலசுப்பிரமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளராக இருக்கும் பி.பலராமன் நீக்கப்பட்டு, டி.எ.ஏழுமலை நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோன்று, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கழக பொறுப்பில் இருக்கும் பலரை அதிரடியாக நீக்கி, அவர்களுக்கு பதிலாக புதிய கழக பொறுப்பாளர்களை டிடிவி தினகரன் நியமித்துள்ளார்.