டிடிவி. தினகரன் விரைவில் புதிய கட்சி தொடங்கி, சின்னம் வாங்குவது உறுதி – தங்கதமிழ்ச்செல்வன்.

690

டிடிவி. தினகரன் விரைவில் புதிய கட்சி தொடங்கி, சின்னம் வாங்குவது உறுதி என அவரது ஆதரவாளர் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் ரவுடிகள் ராஜ்ஜியமாக இருப்பதாகவும், மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு முற்றிலும் கெட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். அரசுத் திட்டங்கள் எதுவும் மக்களை சென்றடையவில்லை என்று கூறிய தங்க தமிழ்ச்செல்வன், இதே நிலை தொடர்ந்தால், மிக மோசமான நிலைக்கு தமிழகம் சென்று விடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். உள்ளாட்சி தேர்தலில் தினகரன் அணி நூறு சதவீதம் வெற்றி பெறுவது உறுதி என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.