ஆர்.பி.உதயக்குமார் ஒரு காமெடி நடிகர் – டிடிவி தினகரன்

88

அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் ஒரு காமெடி நடிகர் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் விமர்சித்துள்ளார்.

தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது என்றார். ஆட்சியாளர்கள் கோவில் கோவிலாக சென்று தரிசனம் செய்தாலும், பலன் அளிக்காது என்று டிடிவி.தினகரன் தெரிவித்தார். தமிழகத்தில் எல்லா துறைகளிலும் ஊழல் நடப்பதாகவும், தற்போது தூர் வாரும் திட்டத்தின் மூலம் பகல் கொள்ளை அரங்கேறி வருவதாகவும் அவர் குற்றச்சாட்டினார்.

ஆர்.கே.நகரை தொடர்ந்து, திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என டிடிவி.தினகரன் தெரிவித்தார். அதிமுகவின் எதிரிகள் ஸ்டாலினும், தினகரனும் தான் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேசி இருப்பதற்கு, அவர் ஒரு காமெடி நடிகர் என்று அவர் விமர்சித்துள்ளார்.