200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமமுக ஆட்சியை பிடிக்கும் – டிடிவி தினகரன்

181

200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமமுக கட்சி ஆட்சியை பிடிக்கும் என அக்கட்சியின் துணை பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கோவை கொடீசியா மைதானத்தில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், அக்கட்சியின் துணை பொதுசெயலாளர் டிடிவி தினகரன், அமைப்பு செயலாளர்கள் செந்தில் பாலாஜி, சேலஞ்சர் துரை, கர்நாடகா மாநில செயலாளர் புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய தினகரன், இரட்டை இலை சின்னத்தை நிச்சயம் மீட்போம் என்றார். 18 எம்.எல்.ஏ-கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக அமையும் எனக்கூறிய அவர், 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்றார்.