தமிழகத்தின் உரிமைகளை மீட்டவர் ஜெயலலிதா என டிடிவி. தினகரன் புகழாரம் சூட்டியுள்ளார்..!

412

தமிழகத்தின் உரிமைகளை மீட்டவர் ஜெயலலிதா என டிடிவி. தினகரன் புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தீய சக்தி கூட்டத்தின் பொய்ப் பிரச்சாரத்தை தனி ஒரு ஆளாக நின்று முறியடித்தவர் ஜெயலலிதா என்று தெரிவித்துள்ளார். 69 சதவீத இடஒதுக்கீட்டை சட்டமாக்கி, தமிழகத்தின் உரிமைகளை மீட்டுத் தந்தவர் ஜெயலலிதா என தினகரன் புகழாரம் சூட்டியுள்ளார்.அன்பின் சக்தி, ஆற்றலின் சக்தி ஜெயலலிதா என்று தெரிவித்துள்ள அவர்,மக்களவையில் நதிநீர் இணைப்பைப் பற்றி பேசி, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பாராட்டைப் பெற்றவர் ஜெயலலிதா என்று கூறியுள்ளார்.தமிழகத்தில் அடிமைத்தன ஆட்சி நடைபெற்று வருவதாக கூறியுள்ள தினகரன்,துரோகிகளிடம் அதிமுக , இரட்டை இலை சின்னம் இருக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.தலைநிமிர்ந்த தமிழகம், வளமான தமிழர் வாழ்வு என்ற ஜெயலலிதாவின் கொள்கையை உறுதி செய்வோம் என்றும் தினகரன் கூறியுள்ளார்.