தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சபாநாயகரின் முடிவு தவறு என்பதை நிரூபித்துவிட்டு மக்கள் மன்றத்தை சந்திப்பார்கள் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசின் ஒவ்வொரு உறுப்புகளும் ஒவ்வொன்றாக செயலிழந்து வருகின்றன என்றார். பதற்றத்தில் இருக்கும் தமிழக அமைச்சர்கள் தாயைப் போல் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவமரியாதை செய் து வருகின்றனர் என்று குற்றம் சாட்டினார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அதிமுக-வையும் இரட்டை இலையையும் மீட்டெடுப்போம் என்று கூறிய டிடிவி தினகரன், இயற்கையை அழிக்காமல் 8 வழி பசுமை சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.