டிடிவி தினகரனுக்கு வலுக்கும் எதிர்ப்பு : புதிய பொறுப்புகளுக்கு எம்எல்ஏ-க்கள் மறுப்பு..!

253

டிடிவி.தினகரன் வழங்கிய பொறுப்புகள் தேவையில்லை என்று எம்எல்ஏக்கள் சத்யா பன்னீர் செல்வம், பழனி, ஏ.கே.போஸ், கதிர்காமு ஆகிய நான்கு பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் 18 அமைப்பு செயலர்கள் உள்ளிட்ட பல்வேறு நியமனங்களை டிடிவி தினகரன் அறிவித்தார். இதில் அதிமுக எம்.எல்.ஏக்கள் பலருக்கும் கட்சி பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே அதிமுக மகளிர் இணை செயலராக நியமிக்கப்பட்டுள்ள பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் தினகரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். இந்நிலையில், புரட்சித்தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் பதவி தன்னை கேட்காமல் வழங்கப்பட்டதாக ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி கூறினார். மேலும் ஜெயலலிதா கொடுத்த எம்எல்ஏ பதவி போதும் என்றும், வேறு எந்த பதவியும் வேண்டாம் என்று கூறிய பழனி, டிடிவி.தினகரன் வழங்கிய பதவிக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.