தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் மனுக்கள் பரிசீலனை | டிடிவி தினகரன், மதுசூதனன், தீபா மனுக்கள் ஏற்பு

236

ஆர்.கே. நகர் தொகுதியில் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், 82 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. டிடிவி தினகரன், மதுசூதனன், மருது கணேஷ், கங்கை அமரன், தீபா ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 127 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. டிடிவி தினகரன், மசூதனன், தீபா, தேமுதிக வேட்பாளர் மதிவாணன், திமுக வேட்பாளர் மருது கணேஷ், பாஜக வேட்பாளர் கங்கை அமரன் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அந்தோணி சேவியரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் 82 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. முறையாக இல்லாத 45 மனுக்களை தள்ளுபடி செய்தார் தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயர். இதனிடையே, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.