டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு ..!

521

டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து குக்கர் சின்னம் ஒதுக்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினகரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கி உத்தரவிட்டது. இந்நிலையில், தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கை மூன்று வாரங்களுக்குள் விசாரிக்கவேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை மூன்று வாரங்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.